பெண்கள் ஒதுக்கீட்டு இடத்திற்கு ஆண்கள் மனு தாக்கல் : வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து - மக்கள் ஏமாற்றம்

அரியலூர் அருகே இடஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடியால், வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் ஒதுக்கீட்டு இடத்திற்கு ஆண்கள் மனு தாக்கல் : வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து - மக்கள் ஏமாற்றம்
x
அரியலூர் அருகே இடஒதுக்கீடு விவகாரத்தில் ஏற்பட்ட குளறுபடியால், வார்டு உறுப்பினர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. கீழமாளிகை கிராம 4-வது வார்டு உறுப்பினர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், இதனை அறியாமல் 4 ஆண்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனுக்கள் மீதான பரிசீலனையின்போது இடஒதுக்கீடு விவகாரம் தெரியவரவே, அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டதுடன், வார்டு உறுப்பினர் தேர்தலும் ரத்து செய்யப்பட்டது. இதனால் 4-வது வார்டை சேர்ந்த மக்கள், கிராம தலைவர் உள்ளிட்ட மற்ற 3 பதவிகளுக்கு மட்டும் வாக்களித்தனர். பிற வார்டுகளுக்கு உறுப்பினர்கள் தேர்வான நிலையில், தங்களது வார்டுக்கு மட்டும் தேர்தல் நடைபெறாதது மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்