"ஒவைசி போல் பேசி வருகிறார், ஸ்டாலின்" - பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் குற்றச்சாட்டு

மதக்கலவரத்தை தூண்டுவது போல் பேசி வரும் ஒவைசி போல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக, பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒவைசி போல் பேசி வருகிறார், ஸ்டாலின் - பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் குற்றச்சாட்டு
x
சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக மாநில தலைவருக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.  இதில்,பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய நரசிம்மராவ், குடியுரிமை திருத்தச்சட்டம் குறித்து,எதிர் கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக கூறினார். அதற்கு எதிர்வினை ஆற்றுவதை நிறுத்தி விட்டு,நாடு முழுவதும்  வீடு வீடாகச்சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறினர். தவறான பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் மாநிலத்தில், தமிழகம்  மோசமான நிலையில் உள்ளதாக கூறினார்.  திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் ஒவைசி போல் பேசி வருவதாக நரசிம்மராவ் குற்றம்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்