எலுமிச்சையின் விலை கடும் சரிவு
எலுமிச்சையின் விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எலுமிச்சையின் விலை கடுமையாக சரிந்துள்ளதால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவில் எலுமிச்சை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரு எலுமிச்சையின் விலை 3 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில், தற்போது 40 பைசா வரை சரிந்துள்ளது. இதனால் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக கூறும் விவசாயிகள், எலுமிச்சை ரசாயன பவுடரை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துவதால் எலுமிச்சை பழ வியாபாரம் குறைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Next Story