காதல் திருமணம் செய்த இளைஞர் மீது தாக்குதல் - பெரியகுளம் அருகே ஆணவக் கொலை முயற்சி..?

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காதலித்து திருமணம் செய்த இளைஞர் மீது பெண் வீட்டார் நடத்திய கொலை வெறித் தாக்குதல் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த இளைஞர் மீது தாக்குதல் - பெரியகுளம் அருகே ஆணவக் கொலை முயற்சி..?
x
தேனி மாவட்டம்  எ.புதுக்கோட்டையை  சேர்ந்த ராஜூ, அதே பகுதியை சேர்ந்த காயத்ரியை காதலித்து வந்துள்ளார். ஆகஸ்ட் மாதம் இருவரும் திருமணம் செய்த நிலையில், இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் சம்மதம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராமத்தை விட்டு இருவரும் வெளியேறி, பெரியகுளம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி காலனியில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில்  நேற்று மளிகைக் கடைக்கு, இரு சக்கர வாகனத்தில் வந்த ராஜூவை வழிமறித்த கும்பல் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளனர்.. இந்த தாக்குதலில் நிலைகுலைந்த ராஜூவின் சத்தம் கேட்டு  அருகில் இருந்தவர்கள் வந்ததையடுத்து 3 பேரும் தப்பியோடி விட்டதாக மக்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த ராஜூ அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில், காயத்திரி தந்தை மற்றும் 2 சகோதரர்களை தேடி வருகின்ற​னர். 

Next Story

மேலும் செய்திகள்