மதுரை அருகே கவுன்சிலர் மீது தாக்குதல் : கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி

வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்த கவுன்சிலர் மற்றும் அவரின் உறவினர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிய 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை அருகே கவுன்சிலர் மீது தாக்குதல் : கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
x
மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினராக,  பாண்டியம்மாள் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், தனது கணவர் ஞானசேகரன் மற்றும் உறவினர்கள் ஆறுமுகம், சேகர் ஆகியோருடன் நே​ற்றிரவு 8 மணியளவில் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார்.  அப்போது 3 கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்டோர் கொண்ட மர்ம கும்பல் 3 பேரையும் அரிவாள் மற்றும் அம்புகளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 3 பேருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரும், தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.  இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்