வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் நன்றி...

ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளனர்.
வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் நன்றி...
x
8 மாதங்களுக்கு முன் நாடாளுமன்ற தேர்தலில் பல்வேறு காரணங்களால் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்ததாக, அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தமிழக அரசு நிகழ்த்தி வரும் பல்வேறு சாதனைகளால் தமிழக மக்களின் அன்பையும், ஆதரவையும் அதிமுக மீண்டும் பெற்று வருவதையே தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அதிமுகவை காப்பாற்றி இரட்டை இலை சின்னத்தை மீட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளை மீட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது அதிமுகவின் செல்வாக்கை நிலைநாட்டியுள்ளதாகவும், இவை அனைத்தும் அதிமுக அரசின் மக்கள் பணிகளுக்கு கிடைத்த பரிசு எனவும் அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் சிறப்பாக மக்கள் பணியாற்ற வேண்டும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்