குடியுரிமை சட்டம் : "3ஆம் தேதி முதல் விழிப்புணர்வு கூட்டம்" - பாஜக மாநில உயர்மட்ட கூட்டத்தில் முடிவு

சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக மாநில உயர்மட்ட அரசியல் குழு கூட்டம் நடைபெற்றது.
குடியுரிமை சட்டம் : 3ஆம் தேதி முதல் விழிப்புணர்வு கூட்டம் - பாஜக மாநில உயர்மட்ட கூட்டத்தில் முடிவு
x
சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், பாஜக மாநில உயர்மட்ட அரசியல் குழு கூட்டம்  நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர்  வானதி சீனிவாசன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில், தமிழகம் முழுவதும் வரும் 3ஆம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலங்கள் மற்றும் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், 16ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று மாணவர்கள் மற்றும் பெண்களிடையே, தொண்டர்கள் விளக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்