வேலூர் : தேங்காய் வியாபாரியின் வீட்டில், கா​ல் கிலோ வெள்ளி, மற்றும் 48 ஆயிரம் ரூபாய் திருட்டு

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில், தேங்காய் வியாபாரியின் வீட்டில், கா​ல் கிலோ வெள்ளி, மற்றும் 48 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
வேலூர் : தேங்காய் வியாபாரியின் வீட்டில், கா​ல் கிலோ வெள்ளி, மற்றும் 48 ஆயிரம் ரூபாய் திருட்டு
x
முல்லை நகரில் வசித்து வரும் கயாஸ் என்பவர், தமது வீட்டில் மர்மநபர்கள் சிலர், பீரோவில் இருந்த 11 சவரன் தங்க நகை மற்றும் கால் கிலோ வெள்ளி 48 ஆயிரம் ரொக்கப்பணத்தை திருடிச்சென்றதாக, குடியாத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கயாசின் மகள்கள், 11 சவரன் தங்க நகைகளை, துணியில் சுற்றி வைத்திருந்ததால், அவை கொள்ளையர்களின் கைகளில் சிக்காமல் தப்பியது தெரிய வந்தது. ஆனாலும் வெள்ளி, மற்றும் ரொக்கப்பணத்தை திருடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்