மென்பொறியாளரை கொலை செய்து எரித்த விவகாரம் : பக்கத்து வீட்டு இளைஞர் உள்பட நால்வர் கைது

கோவை சுந்தராபுரம் மென் பொறியாளரை எரித்து கொலை செய்த வழக்கில், நால்வரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மென்பொறியாளரை கொலை செய்து எரித்த விவகாரம் : பக்கத்து வீட்டு இளைஞர் உள்பட நால்வர் கைது
x
பெங்களூருவில் மென் பொறியாளராக பணியாற்றிய குறிச்சி பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர், மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த நிலையில், அக்டோபர் மாதம் முதல், எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த அவரது உறவினர், கடந்த 22 ஆம் தேதி சக்திவேலின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, உடல் முழுவதும் எரிந்த நிலையில், சக்திவேல் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் விசாரித்ததில், நண்பர்கள் மூவருடன் சேர்ந்து பக்கத்து வீட்டு ஆனந்தகுமார், மதுபோதையில் கட்டையால் அடித்து கொலை செய்து, மண்ணெண்ணை ஊற்றி எரித்தது தெரியவந்தது. அக்டோபர் 3ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தில், ஆனந்தகுமார், சரவணன், வைத்தியலிங்கம், சின்னதுரை ஆகிய நால்வரையும் கைது செய்தனர். அவர்கள் திருடிய 7 சவரன் நகை, 2 டி.வி, புல்லட் ஆகியவற்றையும் போலீசார் மீட்ட நிலையில், அனைவரையும் சிறையில் அடைத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்