"பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழப்பு" - மருத்துவர்கள் அலட்சியமே காரணம் என புகார்

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழப்பு - மருத்துவர்கள்  அலட்சியமே காரணம் என புகார்
x
பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். ஆர்எஸ் மடை கிராமத்தை சேர்ந்த முருகேசன் மனைவி கீர்த்திகாவிற்கு  பிரசவ வலி ஏற்பட்டதால், நேற்று மாலை ராமநாதபுரம் அரசு   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்த்த நிலையில், தாயும்,சேயும் உயிரிழந்தனர். மருத்துவர்கள் அலட்சியத்தால் உயிரிழப்பு நிகழ்ந்ததாக கூறி, ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதன் பின் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்