உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் மரணம் - ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் மரணம் - ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி
x
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். உடல்நலக்குறைவால் முன்னாள் நீதிபதி  மோகன்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். ராஜா அண்ணாமலைபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து,  நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், தமிழ் இலக்கியத்தில் அதிக ஈடுபாடு கொண்ட மோகன், அதன் வளர்ச்சிக்கு துணையாக நின்றவர் என்று கூறினார். மோகன் பெரிய நீதிவான் என்பதை நாடறியும் என்றும், இளமையும் வளமையும் பெற்ற ஒரு கவிஞன் என்பதை இலக்கிய உலகம்  அறியும் எனவும் கவிஞர் வைரமுத்து  தெரிவித்தார். Next Story

மேலும் செய்திகள்