சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கு : "குற்றவாளிக்கு தூக்கு தண்டனை" - கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கோவை பன்னிமடையில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்கார கொலை செய்த சந்தோஷ் குமாருக்கு, தூக்கு தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
x
கடந்த மார்ச் மாதம், பன்னிமடையில் ஏழு வயது சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறை, தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கைது செய்தது. கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று காலை, சந்தோஷ் குமார் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து மாலை மூன்று மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து மாலை 3 மணியளவில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிபதி ராதிகா அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தூக்குத்தண்டனையோடு சேர்த்து ஆயுள் தண்டனை மற்றும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான மரபணு பரிசோதனையில் மற்றொரு நபரின் டி.என்.ஏ இருப்பது தெரியவந்துள்ளதாக சிறுமியின் தாயார் தொடர்ந்து வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது




Next Story

மேலும் செய்திகள்