"வாக்கு சீட்டை பயன்படுத்தி வாக்களித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது" - பொதுமக்கள் கருத்து

தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருவதால் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
x
தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்கு பிறகு இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருவதால் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகிறது. 4 பதவிகளுக்கு வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, மஞ்சள் நிற வாக்குச்சீட்டுகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகிறார்கள். வாக்கு சீட்டை பயன்படுத்தி வாக்களித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் வித்தியாசமாக இருந்ததாகவும் வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்