தமிழகத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா

தமிழகத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது
தமிழகத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா
x
நாமக்கல்: வடைமாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

அனுமன் ஜெயந்தியையொட்டி,  நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்,  2 டன்  மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதுடன், ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரத்துடனும் அருள்பாலித்தார். அதிகாலை 5 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.  

சுசீந்திரம்: 8அடி உயர ஆஞ்சநேயருக்கு அபிஷேகம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில், அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு, 16 வகையான திவ்ய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. 16 வகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்ட பின் வடைமாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, எலுமிச்சம் பழ மாலை ஆகியவை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் துவங்கி நள்ளிரவு நடைபெற உள்ளது.

புதுச்சேரி: ஏலக்காய் மாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர்

புதுச்சேரி அடுத்த பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்திவிழாவை முன்னிட்டு பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. 

கும்பகோணம்: மலர்குடையுடன் அருள்பாலித்த ஆஞ்நேயர்


கும்பகோணம் பாலக்கரை சாலையில், மலர்க்குடையுடன் காட்சியளித்த விஸ்வரூப ஆஞ்சநேயரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அனுமன் ஜெயந்தியை ஒட்டி உலக நன்மை வேண்டி அங்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.  வேறெங்கும் இல்லாத வகையில், மலர் குடையுடன் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.







Next Story

மேலும் செய்திகள்