"தினமும் மக்களின் எண்ணத்தை அறிந்து ஆட்சி நடத்த முடியாது" - சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவர்

நாள்தோறும் மக்களின் எண்ணங்களை அறிந்து ஆட்சி நடத்த முடியாது என பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
x
நாள்தோறும் மக்களின் எண்ணங்களை அறிந்து ஆட்சி நடத்த முடியாது என பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மறைந்த பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாள் விழா, சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், இல. கணேசன், சி.பி. ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று வா​ஜ்பாய் படத்துக்கு மரியாதை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி.பி. ராதாகிருஷ்ணன், பெரியார் மீதான பதிவு குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு கணக்கில் எடுக்கும் என்றார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவர், தினமும் மக்களின் எண்ணங்கள் எப்படி இருக்கின்றன என்பதை கேட்டு பிரதமர் செயல்பட முடியாது என்று கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்