ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா - நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்ட பக்தர்கள்

ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதுடன் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு வருகின்றனர்.
x
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி,  நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில்,  2 டன்  மலர்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளதுடன், ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.  காலை   11 மணிக்கு பின்,  வடைமாலை  அகற்றப்பட்டு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு  அபிஷேகம்  நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு சாமிக்கு தங்க கவசம் சாத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்கு ஏற்ப,  சாமி தரிசனத்துக்கு 250 ரூபாய், 20 ரூபாய்,  இலவச தரிசனம் என தனித்தனி வழிகள் அமைக்கப்பட்டுள்ளன.  சுமார் 350 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்