"உச்ச நட்சத்திரங்களின் படம் தோல்வியடைந்தால் நஷ்ட ஈடு தர வேண்டும்" - திரையரங்க உரிமையாளர்

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
x
கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் குறிப்பிட்ட நட்சத்திரங்களின் படங்களை திரையிட மாட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக அரசு 8 சதவீதம் வரியை பிப்ரவரி மாதத்திற்குள் விலக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாவிட்டால் மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்படும் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் சக்தி சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்