"சிலம்பம் சுற்றி சாதனை" - இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இடம்பிடித்த 3 வயது சிறுமி

5 நிமிடங்கள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த 3 வயது சிறுமி தீவிஷா சாதனை படைத்துள்ளார்.
x
5 நிமிடங்கள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி வேலூர் சத்துவாச்சேரியை சேர்ந்த 3 வயது சிறுமி தீவிஷா சாதனை படைத்துள்ளார்.  2 வயது முதலே ஆர்வமுடன் சிலம்ப பயிற்சி பெற்றுவந்த தீவிஷா,  பெரியவர்களுக்கு நிகராக அற்புதமாக சிலம்பம் சுழற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி தீவிஷா  5 நிமிடங்கள் இடைவிடாமல் ஒற்றைக் கம்பு, இரட்டை கம்பு, மான்கொம்பு சுற்றுவதை வீடியோவாக பதிவு செய்த பெற்றோர், "இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்" அமைப்புக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் திறமையை பாராட்டி பதக்கம், சான்றிதழ் வழங்கிய அந்த அமைப்பினர், திவீஷாவை சாதனையாளராக அங்கீகரித்து அதற்கான அடையாள அட்டையை வழங்கி கவுரவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்