சாலையைக் கடந்தவர் மீது பேருந்து மோதி விபத்து : சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
பேருந்து மோதி ஒருவர் பலியானதை அடுத்து பொதுமக்கள் நடத்திய சாலைமறியலால், பூந்தமல்லி அருகே ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னை பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்திபன், திருமழிசை சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்துள்ளார். நேற்றிரவு வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக பூந்தமல்லி - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செம்பரம்பாக்கம் பகுதியில் சாலையை கடந்துள்ளார். அப்போது, கர்நாடக மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த பேருந்து பார்த்திபன் சென்ற , மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிக்னல் இல்லாத காரணத்தால் அடிக்கடி இப்பகுதியில் உயிரிழப்பு ஏற்படுவதாக பொது மக்கள் குற்றம்சாட்டினர்.
Next Story