"மக்களை வஞ்சிக்கும் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" - வாக்காளர்களுக்கு செந்தில் பாலாஜி வேண்டுகோள்
கரூர் மாவட்டம் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் தான்தோன்றி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார். மேட்டுப்பாளையம், கடம்பன்குறிச்சி, உள்ளிட்ட 76 கிராமங்களில் திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, மக்களை ஏமாற்றி வஞ்சித்து கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி கேட்டுக் கொண்டார். அ.தி.மு.க.வினர் மீதான தனது குற்றச்சாட்டை மறுக்க முடியுமானால், தன் மீது வழக்கு தொடுக்க முடியுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story