காரில் பயணம் செய்யும் போது குடிநீர் பிரச்சனை : புதிய முறையை கண்டுபிடித்து இளைஞர் சாதனை

காரில் பயணம் செய்யும்போது குடிநீர் தேவையை போக்கும்‌ விதமாக புதிய முறையை பழனியருகே உள்ள கடத்தூரை சேர்ந்த ராஜ ஞானப்பிரகாசம் கண்டுபிடித்துள்ளார்.
காரில் பயணம் செய்யும் போது குடிநீர் பிரச்சனை : புதிய முறையை கண்டுபிடித்து இளைஞர் சாதனை
x
காரில் பயணம் செய்யும்போது குடிநீர் தேவையை போக்கும்‌ விதமாக புதிய முறையை பழனியருகே உள்ள கடத்தூரை சேர்ந்த ராஜ ஞானப்பிரகாசம் கண்டுபிடித்துள்ளார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அவர்  ஏற்கனவே வானில் பறக்க பயன்படும்  பாரா கிளைடரை உருவாக்கி அதில் வானில் பறந்து சாதனை படைத்தார். இந்நிலையில்  காரின் டிக்கியில்  25லிட்டர் குடிநீர் கேனை வைத்து அதனுடன் சிறிய மோட்டாரை இணைத்துபைப் லைன் முன்பக்கமுள்ள டேஷ்போர்டில் பொருத்தியுள்ள சிறிய குழாய் வழியாக தண்ணீர் பெறும் முறையை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் நீண்ட தூரம் காரில் பயணம் செல்வோரின் தண்ணீர் பிரச்சனை தீரும் என்றும் ராஜ ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்