வடகிழக்கு பருவமழை முடியும் நிலை : ஏரிகள் நிரம்பாததால் மீண்டும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
பருவமழைக் காலம் முடிவடைய உள்ள நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய ஏரிகளின் நீர்மட்டம் பாதியளவே நிரம்பி இருப்பதால் கோடைகாலத்தில் நீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக, கோடை காலத்தில் சென்னை மக்கள், குடிநீருக்காக பட்ட சிரமம் எளிதில் மறக்க கூடியதல்ல. இந்த ஆண்டு, வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்த நிலையிலும், சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் பாதியளவே நிரம்பி இருக்கின்றன. இதனால், கோடையில் நீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மூன்றாயிரத்து 231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் ஆயிரத்து 522 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
சோழவரம் ஏரியில் 123 மில்லியன் கன அடியும், செங்குன்றம் ஏரியில் இரண்டாயிரத்து 351 மில்லியன் கனஅடி தண்ணீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் பாதி அளவே தண்ணீரும் உள்ளது.
இருந்த போதிலும், கோடையில், தங்கு தடையின்றி குடிநீர் வழங்க முடியும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
பொது மக்களுக்கு வழங்கும் குடிநீரின் அளவை குறைத்து வழங்கினால், கோடைகாலத்தை சமாளிக்க முடியும் என்கின்றனர்
வல்லுனர்கள்......
Next Story