தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்தல்

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அரிய வகை எலி, நாய், அணில், பல்லி கடத்தல் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அரிய வகை உயிரினங்கள் கடத்தல்
x
தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை கங்காரு எலி, புல்வெளி நாய், சிவப்பு அணில், நீல பல்லி ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 8 பிளாஸ்டிக் கூடைகளில் அவற்றை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த முகமது மைதீன் என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரித்தனர். வட அமெரிக்காவில் வாழும் 12 கங்காரு எலிகள், 3 புல்வெளி நாய்கள், இங்கிலாந்து, ரஷ்யா, இத்தாலி  நாடுகளில் காணப்படும் சிவப்பு அணில்,  கடலோர பகுதியில் வாழும் 5 நீல பல்லிகள் ஆகியவற்றை மீண்டும் தாய்லாந்திற்கு திருப்பி அனுப்ப உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்