பிளேடால் கீறி, தூக்கிட்டு மாணவர் தற்கொலை - தந்தை இறந்த துக்கம் தாளாததால் விபரீதம்

மதுரை மாவட்டம் கீழகுயில்குடியில் கல்லூரி விடுதியில் மாணவர் ஒருவர் கையில் பிளேடால் கீறி கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிளேடால் கீறி, தூக்கிட்டு மாணவர் தற்கொலை - தந்தை இறந்த துக்கம் தாளாததால் விபரீதம்
x
தூத்துக்குடியில் உள்ள ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த மாணவர் பொன்ராஜ் கல்லூரி விடுதியில்-  தங்கி எம்.பி.ஏ. பயின்று வந்தார். ஜனவரி ஒன்றாம் தேதி வரை, அரசு விடுமுறை அளித்து இருந்த நிலையில் அனைத்து மாணவர்களும் விடுதியில் இருந்து ஊருக்கு சென்றுள்ளனர். அனைத்து மாணவர்களும் விடுதியை விட்டு சொந்த ஊருக்கு சென்ற நிலையில், பொன்ராஜ் திடீரென்று தன் கையை பிளேடால் கிழித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த போலீசார் பொன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பொன்ராஜின் தந்தை நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் துக்கம் தாளாத பொன்ராஜ், மனவேதனையில் பிளேடால் கையை அறுத்தும், கழுத்தை அறுத்தும் தற்கொலைக்கு முயன்று இறுதியில் கயிற்றால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்