மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு - திமுக பிரமுகர் சீனியம்மாளுக்கு நிபந்தனை ஜாமீன்

நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உட்பட மூவர் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சீனியம்மாளுக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு - திமுக பிரமுகர் சீனியம்மாளுக்கு நிபந்தனை ஜாமீன்
x
நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரின் கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் ஆகிய மூவரையும் கடந்த ஜூலை மாதம் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்திகேயன் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சீனியம்மாள் மற்றும் அவரின் கணவர் சன்னாசி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கார்த்திகேயன் கடந்த மாதம் ஜாமீனில் வெளிவந்த நிலையில், உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கும் ஜாமீன் வழங்க வேண்டும் என சீனியம்மாள் மனுத்தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட  நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, சீனியம்மாளுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்