சசிகலா தாக்கல் செய்த மனுக்ககள் தள்ளுபடி - உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிகலா தாக்கல் செய்த 6 மனுக்களையும் செல்லாது எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
சசிகலா தாக்கல் செய்த மனுக்ககள் தள்ளுபடி - உயர்நீதிமன்றம்
x
பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி, ரிசார்ட் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கியது தொடர்பாக சசிகலாவுக்கு எதிரான வழக்கில், மதிப்பீட்டு பணிகள் முடித்து விட்டதாக, வருமான வரித்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 2017 நவம்பர் மாதம் சசிகலாவின் உறவினர் கிருஷ்ணபிரியா வீட்டில் வருமான வரித்துறையினர்  சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து 2016ம் ஆண்டு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு ரிசார்ட், இரண்டு ஷாப்பிங் மால்கள், உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை சசிகலா வாங்கியதாக வருமான வரித்துறை கண்டறிந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிகலா தாக்கல் செய்த 6 மனுக்களையும் செல்லாது எனக் கூறி தள்ளுபடி செய்து  உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்