அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் பவளவிழா - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

சென்னையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் பவளவிழா இன்று நடைபெற்றது.
அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் பவளவிழா - தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு
x
சென்னையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அழகப்பா தொழில்நுட்ப கல்லூரியின் பவளவிழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு முன்னாள் மாணவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். பின்னர் பேசிய ஆளுநர் , கல்வி நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று கூறினார். அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி சிறப்பான முறையில் 75 ஆண்டுகளாக இயங்கி வருவதாக அவர் தெரிவித்தார். தாம் ஆளுநராக பொறுப்பேற்ற பின்,  தகுதியான திறமையானவர்கள் துணைவேந்தர் பதவியில் நியமிக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா சிறப்பான முறையில் செயல்பட்டு வருவதாகவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.
Next Story

மேலும் செய்திகள்