மேட்டூர் அணையில் காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவர் ஆய்வு

காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவர் சுப்ரமணியம் மேட்டூர் அணையில் இன்று ஆய்வு மேற்கொண்டார்
மேட்டூர் அணையில் காவிரி தொழில் நுட்பக் குழுத் தலைவர் ஆய்வு
x
காவிரி தொழில் நுட்பக் குழுத்  தலைவர் சுப்ரமணியம்  மேட்டூர் அணையில் இன்று ஆய்வு மேற்கொண்டார். காவிரி தொடர்பான அடுத்தகூட்டத்தில் தமிழக அரசின் நிலைபாடு குறித்தும், நீர் தேவைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய ஏதுவாக இன்று மேட்டூர் அணையின்16 கண் உபரிநீர் போக்கி, கவர்னர்  வியூ பாயிண்ட், சுரங்கப் பாதை, காலவாய் உள்ளிட்ட பகுதிகளில் சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். கண்காணிப்பு பொறியாளர் ஜெயகோபி, நிர்வாக பொறியாளர் தேவராஜன், எஸ்.டி. ஓ., சுப்ரமணியன், உதவி பொறியாளர் மதுசூதனன் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்போது தேவையான புள்ளி விபரங்களை அளித்தனர். அணையின் தற்போதைய நீர் இருப்பு  நிலவரம், கர்நாடகம் வழங்கிய நீர் அளவு, டெல்டாவிற்கு வழங்கப்பட்டுள்ள நீர் அளவு, எதிர்காலத் தேவை ஆகியவை குறித்து அதிகாரிகளிடம் சுப்பிரமணியம் கேட்டறிந்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்