மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு கலவை சாதம்

மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் உள்ள யானைகள், பசுந்தீவனங்களைவிட, கலவை சாத உருண்டை அதிகம் விரும்பி சாப்பிடுவதாக பாகன்கள் தெரிவிக்கின்றனர்.
மேட்டுப்பாளையம் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு கலவை சாதம்
x
தேக்கம்பட்டி பவானிஆற்றுப்படுகையில் நடைபெற்று வரும் புத்துணர்வு முகாமில் கலந்து கொண்டுள்ள 28 யானைகளுக்கு நாள்தோறும் ராஜ உபசரிப்பு தான். ஷவர் குளியல் முடிந்ததும், உணவு கூடத்திற்கு அழைத்து செல்லப்படும் யானைகளுக்கு, கலவை சாத உருண்டை வழங்கப்படுகிறது. பாகன்கள் உருட்டி ஊட்டும் அந்த சாத உருண்டைக்காக, வாயில் எச்சில் ஊற யானைகள் காத்திருக்கின்றன. கலவை சாதத்தை யானைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவதற்கு காரணம், அதில் உள்ள அரிசி சாதம், கொள்ளு, பச்சைப்பயறு, ராகி, மஞ்சள், கருப்பட்டி ஆகிய மூலப்பொருட்களே என பாகன்கள் கூறுகின்றனர். ஊட்டசத்து மிகுந்த உணவோடு, பசுந்தீவனங்கள் வழங்கப்படுவதால், முகாமில் உள்ள யானைகள் அனைத்தும் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியோடும் இருப்பதாக கால்நடை மருத்துவர்கள் சொல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்