ஆபாச படம் : "சென்னையில் 30 பேர் பட்டியல் தயார்" - ஏ.டி.ஜி.பி ரவி

சென்னையில் குழந்தைகள், சிறார்கள் ஆபாசபடங்கள் பார்த்த 30 பேரின் பட்டியலை அனுப்பியுள்ளேன் என கூறி சென்னையில் உள்ள ஆபாச பட பிரியர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளார் காவல்துறை கூடுதல் இயக்குநர் ரவி...
ஆபாச படம் : சென்னையில் 30 பேர் பட்டியல் தயார் - ஏ.டி.ஜி.பி ரவி
x
குழந்தைகள், சிறார்கள் ஆபாச படங்களை பார்ப்போர், பரப்புவோர் மீது தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன் போலீசார் போல போன் செய்து சில நபர்கள் மிரட்ட, அடுத்த போன் நமக்கு தானோ என்ற அச்சத்தில் உறைந்தனர் ஆபாச பட பிரியர்கள் பலர்... இதுகுறித்து விளக்கம் அளித்த ஏ.டி.ஜி.பி., ரவி, போன் செய்ய மாட்டோம்... வீட்டிற்கு சம்மன் அனுப்பி முறையாக அழைத்து விசாரிப்போம் என கூற, மேலும் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் பலர், தூக்கத்தை தொலைத்தனர். இந்த நிலையில், கோடம்பாக்கத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய ஏ.டிஜிபி ரவி, சென்னையிலும் 30 பேர் பட்டியலை அனுப்பிவிட்டு தான் நிகழ்ச்சிக்கே வந்தேன் என கூறி சென்னை இளைஞர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்