சென்னை: ரயில் நிலையத்தில் கையெறி குண்டுகள் பறிமுதல்
சென்னை ரயில் நிலையத்தில் கிடந்த பெட்டியில் 10 கையெறி குண்டுகள் இருப்பது தெரியவந்த நிலையில் அவற்றை மீண்டும் நாக்பூருக்கே அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ரயில் நிலையத்தில் கிடந்த பெட்டியில் 10 கையெறி குண்டுகள் இருப்பது தெரியவந்த நிலையில் அவற்றை மீண்டும் நாக்பூருக்கே அனுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது. நாக்பூரில் இருந்து சென்னை வந்த ரயிலில் கையெறி குண்டுகள் கொண்ட பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அந்தமானில் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த பெட்டிகளில் ஒரு பெட்டி மறந்து ரயிலில் விட்டு செல்லப்பட்டது. இதையடுத்து ரயில்வே நிர்வாகம் இதனை ஏலத்தில் விட முடிவெடுத்தும் அதை யாரும் ஏலம் எடுக்க முன்வராததால் அதை அதிகாரிகள் பிரித்து பார்த்தனர். அப்போது கையெறி குண்டுகள் கொண்ட பெட்டியை அதிகாரிகள் மீண்டும் நாக்பூருக்கே அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
Next Story

