சட்டவிரோத குழந்தை விற்பனை : மீண்டும் சிக்கிய பெண் இடைத்தரகர்கள்

கோவை அருகே சட்டவிரோத குழந்தை விற்பனை வழக்கில், மீண்டும் பெண் இடைத்தரகர்கள் உள்பட 5 பேர் பிடிபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டவிரோத குழந்தை விற்பனை : மீண்டும் சிக்கிய பெண் இடைத்தரகர்கள்
x
கோவை மாவட்டம் சூலூரில், 2 லட்சம் ரூபாய்க்கு சட்டவிரோத குழந்தை விற்பனை நடைபெற இருந்தது. அப்போது, ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே உள்ள பெண் இடைத்தரகர்கள் ஹசீனா, கல்யாணி, குழந்தையை வாங்க வந்த தம்பதியிடம் கூடுதல் பணம் கேட்டுள்ளனர். இதனால், ஏற்பட்ட வாக்குவாதம், சண்டையாக மாறியது. இதை பார்த்த அதிர்ச்சி அடைந்த மக்கள், ஐந்து பேரை பிடித்து, கருமத்தப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், ஹசீனா, கல்யாணி ஆகிய இருவரும் ஏற்கனவே ராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கில் கைதானவர்கள் என்பது தெரியவந்தது. குழந்தையை விற்க வந்த மதுரையை சேர்ந்த கண்ணன்-ஜோதி தம்பதி ஏற்கனவே தனது முதல் குழந்தையையும் விற்பனை செய்த உண்மையும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து, பெண் இடைத்தரர்கள் ஹசீனா, கல்யாணி, குழந்தை விற்க மற்றும் வாங்க முயன்ற தம்பதிகளிடம் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்