"தேக்கம்பட்டி யானைகள் முகாமிற்கு புதுவரவு : சக யானைகளுடன் கொஞ்சி மகிழ்ந்த யானைகள்"

தேக்கம்பட்டி யானைகள் முகாமிற்கு புதுச்சேரியில் இருந்து வந்த 2 யானைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
x
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் இருந்து 26 யானைகள் கலந்து கொண்ட நிலையில் புதுச்சேரியை சேர்ந்த இரு கோவில் யானைகள் நேற்று வந்தது. மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி மற்றும் திருநள்ளார் கோவில் யானை பிரக்ருதி ஆகிய 2 யானைகளுக்கும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முகாமிற்குள் நுழைந்ததும் சக யானைகளை கண்ட இந்த 2 யானைகளும் உற்சாகத்தோடு விளையாடி மகிழ்ந்தன.

Next Story

மேலும் செய்திகள்