"மின்வாரிய கேங்மேன் தேர்வில் வெற்றி பெற்ற பெண் - சாதித்து காட்டிய கூலித்தொழிலாளி மகள்"
மின்வாரியத்தில் கடின பணியாகிய கேங்மேன் வேலைக்கு, கூலித் தொழிலாளியின் மகள் உடல்தகுதியில் தேர்ச்சி பெற்றது பரவலாக வரவேற்பை பெற்றுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தும்பிபாடி ஊராட்சியை சேர்ந்த சரக்கப்பிள்ளையூரைச் சேர்ந்தவர் நெசவு தொழிலாளி கந்தசாமி - ஜெயலட்சுமி தம்பதியரின் இளைய மகள் செளமியா. ஐடிஐ படித்து விட்டு வீட்டில் இருந்த அவர், மின்வாரிய கேங்மேன் வேலைக்காக விண்ணப்பம் செய்திருக்கிறார்.அந்த வேலையில் சேர வேண்டும் என்பதற்காக, கடந்த 6 மாதங்களாக வீட்டின் அருகே உள்ள மின் கம்பத்தில் ஏறுவது, சுமையை தூக்கி கொண்டு நடப்பது என கடும் பயிற்சிகளை செய்து வந்துள்ளார். மேட்டூரில் நடைபெற்ற, உடல்தகுதி தேர்வில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், 250 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டதில், செளமியா அனைத்திலும் முன்னிலை வகித்துள்ளார்.மின்கம்பத்தில் ஏறி 10 நிமிடத்தில் முடிக்கும் பணியை, 9 நிமிடம் 13 வினாடிகளிலும், 30 கிலோ சாதனத்தை தூக்கிக் கொண்டு செல்லும் தேர்வில், ஒரு நிமிடத்தில் செய்ய வேண்டியதை 36 வினாடிகளில் செய்து அனைவரையும் ஆச்சர்யபடுத்தி உள்ளார். இதையடுத்து, உடல்தகுதியில் தேர்ச்சி பெற்ற அவர், தற்போது எழுத்துத் தேர்வுக்காக காத்திருக்கிறார்.
Next Story