சேலத்தில் அரிய வகை சேவல்கள் கண்காட்சி : வெளி மாநிலங்களில் இருந்து சேவல்கள் பங்கேற்பு

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனியார் அமைப்பு சார்பில் அழிந்து வரும் சேவல் இனங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
சேலத்தில் அரிய வகை சேவல்கள் கண்காட்சி : வெளி மாநிலங்களில் இருந்து சேவல்கள் பங்கேற்பு
x
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே தனியார் அமைப்பு சார்பில் அழிந்து வரும் சேவல் இனங்கள் குறித்த கண்காட்சி  நடைபெற்றது. இந்த கண்காட்சியில் மீட்டர் வால் சேவல், கிளிமூக்கு விசிறிவால் சேவல்  உள்ளிட்ட  பல்வேறு அரிய இன சேவல்கள் இடம் பெற்றன. தமிழ்நாட்டில் இருந்து மட்டுமல்லாமல், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், பத்தாயிரம் ரூபாய் முதல்  இரண்டு லட்ச ரூபாய் வரை விற்பனையாகும் சேவல்கள் கொண்டு வரப்பட்டன. கண்காட்சியை காண, சேவல் வளர்க்கும் ஆர்வம் கொண்ட ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்