கல்லூரி மாணவியை கடத்தி பலாத்காரம் : ஆட்டோ டிரைவர் கைது
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 17 வயது கல்லூரி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே 17 வயது கல்லூரி மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 10ஆம் தேதி மாணவி காணாமல் போன நிலையில், கமலாபுரத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்ற இளைஞர், கடத்திச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story