மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட லோக் அதாலத் : ரூ.396 கோடி மதிப்பில் 65,199 வழக்குகளில் தீர்வு

தமிழகத்தில் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது.
மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட லோக் அதாலத் : ரூ.396 கோடி மதிப்பில் 65,199 வழக்குகளில் தீர்வு
x
தமிழகத்தில் தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. இது குறித்து தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் ராஜசேகர் வெளியிட்ட அறிவிப்பில், இதற்காக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐந்து அமர்வுகளும், மதுரைக் கிளையில் ஆறு அமர்வுகளும் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், மாவட்ட மற்றும் தாலுகா சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில் 493 என 516 அமர்வுகள், வழக்குகளை விசாரித்ததாக கூறப்பட்டது. லோக் அதாலத்தில் விசாரணைக்கு வராத வழக்குகள் என மொத்தம், 2 லட்சத்து 36 ஆயிரம் வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 396 கோடி ரூபாய் மதிப்பிலான 65 ஆயிரத்து 199 வழக்குகள் தீர்வு காணப்பட்டதாக அறிக்கையில் கூற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்