"வேளாண் நிலங்களில் மதுபான கடைகள் அமைக்கலாம்" - டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி

ஈரோடு மாவட்டம், மயிலம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
வேளாண் நிலங்களில் மதுபான கடைகள் அமைக்கலாம் - டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி
x
ஈரோடு மாவட்டம், மயிலம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் உள்ள வேளாண் நிலங்கள் மறுவரையறை செய்யப்பட்டு கல்லூரிகள், மருத்துவமனைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் வேளாண் நிலங்களில் மதுபான கடைகள் அமைக்க எந்த சட்டமும் தடை செய்யவில்லை என்றும் கூறப்பட்டது. இதனை ஏற்று கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, மது வியாபாரம் ஒரு அருவருப்பான வர்த்தகம் என கருத்து தெரிவித்தது. அதேசமயம், வேளாண் நிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க எந்த சட்டமும் தடை செய்யாத நிலையில், விதிகளை பின்பற்றி கடைகளை அமைக்க அனுமதியளித்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்