நாகை அருகே உறவினர்கள் இடையே ஏற்பட்ட நிலத்தகராறு : எரிகொள்ளி தெளித்து அழிக்கப்பட்ட நெற்பயிர்கள்

நாகை அருகே உறவினர்கள் இடையே ஏற்பட்ட நிலத்தகராறில் நான்கு ஏக்கர் நெற்பயிர்கள் எரிகொள்ளி மருந்து தெளித்து அழிக்கப்பட்டுள்ள சம்பவம் சக விவசாயிகளையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நாகை அருகே உறவினர்கள் இடையே ஏற்பட்ட நிலத்தகராறு : எரிகொள்ளி தெளித்து அழிக்கப்பட்ட நெற்பயிர்கள்
x
நாகை மாவட்டம் வெண்மணியை அடுத்துள்ள நுகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டியனுக்கும், அவரது சித்தப்பாவான வேணுகோபாலுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் பாண்டியனின் வயலுக்குள் நுழைந்த மர்ம நபர்க்கள், 90 நாட்கள் வளர்ந்த நெற்பயிர்களில் எரிகொள்ளி மருந்தை தெளித்து விட்டு சென்றுள்ளனர். இதில் நான்கு ஏக்கரில் விளைந்த மொத்த நெற்பயிரும் அழிந்து நாசமானது. இந்த சம்பவம் சக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விவசாயி பாண்டியன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்