பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு : தேடப்படும் நபர்களாக 6 பேர் அறிவிப்பு
திருபுவனத்தில் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில், 6 பேரை தேடப்படும் நபர்களாக என்.ஐ.ஏ அறிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பாமக பிரமுகர் ராமலிங்கம், கடந்த பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். மதமாற்ற முயற்சியை தட்டிக்கேட்டதால் கொலை நடைபெற்றதாக புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக 11 பேரை , திருவிடைமருதூர் போலீசார் கைதுசெய்தனர். இதனை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம், வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், கொச்சியை சேர்ந்த ஏ.எஸ்.பி. சவுகத் அலி தலைமையிலான குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் ரெஹ்மான் சாதிக், முகமது அலி ஜின்னா, அப்துல் மஜீத், புர்ஹாதீன், ஷாகுல் ஹமீது, நபீல் ஹாசன் ஆகிய 6 பேரை தேடப்படும் நபர்களாக என்.ஐ.ஏ அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு எதிராக, கைது வாரண்ட் பிறப்பித்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள், இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
Next Story