"சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்" - நளினி புதிய ஆட்கொணர்வு மனு தாக்கல்

சட்டவிரோதமாக சிறையில் அடைக்கபட்டுள்ளதால், தம்மை விடுவிக்க கோரி, ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
சிறையில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் - நளினி புதிய ஆட்கொணர்வு மனு தாக்கல்
x
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 28 ஆண்டுகளாக சிறை வாசம் அனுபவித்து வருவதாக கூறியுள்ள அவர், நன்னடத்தை விதியின் கீழ், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள், விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை, 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளதை மனுவில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாளே  விடுதலை செய்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்