பெரியமேடு தங்கும் விடுதி தாக்கப்பட்ட சம்பவம் - வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை பெரியமேடு தங்கும் விடுதியில் தாக்குதல் நடத்திய வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
பெரியமேடு தங்கும் விடுதி தாக்கப்பட்ட சம்பவம் - வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்
x
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் அடங்கிய  அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களுக்கு குற்றவியல் நடுவர் மன்றம் ஜாமீன் வழங்கியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இதை பதிவு செய்த நீதிமன்றம், ஒரு சில வழக்கறிஞர்களின் இதுபோனற செயலால் வழக்கறிஞர் தொழிலுக்கே அவமானம் என கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய வழக்கறிஞர்களின் கல்வி விவரங்கள் குறித்து 2 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்