உள்ளாட்சி தேர்தல் : அனைத்து தரப்பு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல்

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அனைத்து தரப்பு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்
உள்ளாட்சி தேர்தல் : அனைத்து தரப்பு வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல்
x
சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகுடஞ்சாவடி , சங்ககிரி மற்றும் எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனைத்து தரப்பு கட்சியினரும் ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்தனர்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் அலுவலகத்திற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மேள தாளங்களுடன் வந்தனர்.   இதனால் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதோடு, சிறிது நேரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை  அடுத்த நம்பியூர் ஒன்றியத்தில் உள்ளாட்சி மன்ற பதவிகளுக்கு அதிமுக சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 
அவர்கள் அனைவரும் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் 500க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று,  வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

சிவகங்கை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கவுன்சிலர் பதவி மற்றும் உள்ளாட்சி  மன்ற பதவிகளுக்கு அமமுகவை சேர்ந்த 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் கட்டானிப்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கும் தமது உறவினர்களுடன் நடிகர் கஞ்சா கருப்பும் வந்திருந்தார். 


Next Story

மேலும் செய்திகள்