சேலத்தில் பிரபல நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 1.5 கிலோ தங்கம், வைர நகைகள் திருட்டு

சேலத்தில் பிரபல நகைக்கடை உரிமையாளர் வீட்டில் ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் பிரபல நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 1.5 கிலோ தங்கம், வைர நகைகள் திருட்டு
x
சேலம் குரங்குசாவடி பகுதியை சேர்ந்த சீனிவாசனுக்கு 3 நகைக்கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சீனிவாசனின் மூன்றாவது மகன் ஸ்ரீபாஷ்சியம் என்பவரது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு ஒன்றரை கிலோ தங்கம் மற்றும் வைர  நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருந்த 6 லட்சம் ரூபாய் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 2 பேர் ஈடுபட்டுள்ளனர் எனவும்,  மாட்டிக் கொள்ளாமல் இருக்க 2 பேரும் மங்கி குல்லா அணிந்து வந்துள்ளனர் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மோப்ப நாய்கள் கண்டு பிடிக்கக் கூடாது என்பதற்காக கொள்ளையர்கள்  மிளகாய் பொடி தூவியும் சென்றுள்ளனர். இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க  3 தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்