குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்

சென்னை சைதாப்பேட்டையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு - உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக போராட்டம்
x
சென்னை சைதாப்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை அடுத்து உதயநிதி ஸ்டாலின் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். போராட்டத்தை தொடர்ந்து நமது தந்தி டிவிக்கு பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்