சென்னை : 250 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது

சென்னை சேலையூர் அருகே 250 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர்.
சென்னை : 250 கிலோ குட்கா பறிமுதல் - இருவர் கைது
x
சென்னை சேலையூர் அருகே 250 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரை கைது செய்தனர். பதுவஞ்சேரியில் வாகன தணிக்கையின்போது சிக்கிய தர்மலிங்கம், இருதயராஜ் ஆகியோரிடம் இருந்து 2 கிலோ பான் மசாலா மற்றும் குட்காவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் பான் மசாலா, குட்காவை மொத்தமாக வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்திய போலீசார், 250 கிலோ பான் மசாலா, குட்கா பொருட்களை கைப்பற்றினர். இருவரையும் தாம்பரம் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்