முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டியதாக புகார் : கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி வனிதா மிரட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டியதாக புகார் : கிராம மக்கள் காவல் நிலையம் முன்பு போராட்டம்
x
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி வனிதா மிரட்டுவதாக  பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உள்ள அவருக்கு  எதிராக செயல்படுவதாக கூறி அடியாட்களை வைத்து இரவில் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக வனிதாவை கைது செய்ய கோரி காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் முன்னிலையில் வனிதா மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. அதனை ஏற்க மறுத்து காவல் நிலையம் முன்பு அமர்ந்து கிராம மக்கள்  போராட்டத்தில்  ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்