முதலமைச்சருடன் கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் சந்திப்பு - மயான பூமிக்கு கூடுதல் இடம் ஒதுக்குமாறு கோரிக்கை

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினருக்கு தலா ஒரு ஏக்கரில் மயான பூமி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
முதலமைச்சருடன் கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் சந்திப்பு - மயான பூமிக்கு கூடுதல் இடம் ஒதுக்குமாறு கோரிக்கை
x
சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கு பகுதியில் இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினருக்கு தலா ஒரு ஏக்கரில் மயான பூமி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு மதத்தினருக்கும் கூடுதலாக தலா இரண்டு ஏக்கர் வீதம் 6 ஏக்கர் நிலத்தை அதிகரித்து வழங்குமாறு வடசென்னை பகுதி இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வட சென்னை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜேஷ் தலைமையில் 30 பள்ளிவாசல் மற்றும் 10 தேவாலயங்களை சேர்ந்தவர்கள் சந்தித்தனர். இதே கோரிக்கைக்காக, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தையும் அவர்கள் சந்தித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்