தமிழக- கேரள நதிநீர் பங்கீடு ஆலோசனை - இரு மாநில அதிகாரிகள் முதற்கட்ட பேச்சுவார்த்தை

தமிழகம், கேரளா இடையிலான நதிநீர் பங்கீடு குறித்து இருமாநில அதிகாரிகளுக்கு இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்று வருகிறது.
x
தமிழகம் மற்றும் கேரளா இடையே நதிநீர்  சிக்கல்களை களைய இருமாநில முதலமைச்சர்களும் கடந்த செப்டம்பர் மாதம் திருவனந்தபுரத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர்.  பின்னர்  இரு மாநில முதன்மை செயலாளர்களும்  6 மாதங்களுக்கு ஒரு முறை கூடி நதிநீர் பிரச்சினை தொடர்பாக ஆலோசனை செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், இரு மாநில அதிகாரிகள் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், பரம்பிக்குளம்-ஆழியாறு, பாண்டியாறு - புன்னம்புழா, நீராறு - நல்லாறு திட்டம், நெய்யாறு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்