தஞ்சாவூர்: ஊராட்சி தலைவர் பதவி ரூ.32 லட்சத்திற்கு ஏலம்

தஞ்சாவூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் பதவி 32 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
திருமங்கலகோட்டை ஊராட்சியில் நடந்த ஊர்க்கூட்டத்தில், இந்த ஏலம் விடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் தொண்டைமான் தெருவைச் சேர்ந்த ஒருவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தீர்மானம் போடப்பட்டுள்ளது. இதற்காக 32 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்பணமாக 2 லட்சம் கட்ட வேண்டும் என்றும் மீதமுள்ள 30 லட்சம் ரூபாயை 15ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த நபர் குறிப்பிட்ட தேதிக்குள் பணம் செலுத்த தவறினால் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கையை மீறி பல இடங்களில் உள்ளாட்சி பதவிகளுக்கான இடங்களை ஏலத்தில் விடும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்